விதிமீறல்களை தடுத்து அமைதியாக தேர்தலை நடத்த ஹாசனுக்கு சிறப்பு குழுவை தேர்தல் ஆணையம் அனுப்ப வேண்டும்
விதிமீறல்களை தடுத்து அமைதியான முறையில் தேர்தலை நடத்த ஹாசனுக்கு சிறப்பு குழுவை தேர்தல் ஆணையம் அனுப்ப வேண்டும் என்று தேவேகவுடா கோரிக்கை விடுத்தார்.
பெங்களூரு,
விதிமீறல்களை தடுத்து அமைதியான முறையில் தேர்தலை நடத்த ஹாசனுக்கு சிறப்பு குழுவை தேர்தல் ஆணையம் அனுப்ப வேண்டும் என்று தேவேகவுடா கோரிக்கை விடுத்தார்.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹாசனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோப்புகள் மீது நடவடிக்கை
ஹாசன் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்று சித்தராமையா வீரா வேசமாக பேசுகிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மாநில அரசு கருத்தில் கொள்ளவில்லை. கோப்புகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக நான் மீண்டும் ஒரு முறை தலைமை தேர்தல் கமிஷனரை சந்திக்க முடிவு செய்துள்ளேன்.
ஹாசன் மாவட்ட கலெக்டரின் பணிகளை நான் சாதகமாக பயன்படுத்தி கொள்ளவில்லை. நான் தவறு செய்திருந்தால் எங்களுக்கு தண்டனை வழங்கட்டும். ஹாசன் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல்கள் அதிகளவில் நடந்து வருகிறது. எனவே இதை கண்காணித்து தடுத்து தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஹாசன் மாவட்டத்திற்கு சிறப்பு குழுவை தேர்தல் ஆணையம் அனுப்ப வேண்டும். தேர்தல் ஆணையம் ஆமை வேகத்தில் செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தை மீறி மாநில அரசு அசுரவேகத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன.
நேர்மையான அதிகாரியை...
நாட்டிலேயே கர்நாடகத்தில் மட்டுமே இப்போது தேர்தல் நடக்கிறது. அதனால் தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். தலைமை செயலாளர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவருடன் இணைந்து பணியாற்ற ஒரு நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story