கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக புகார் அரசியல்வாதியின் மகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்
கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக புகார் கூறிய வழக்கில் அரசியல்வாதியின் மகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக போலீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
பெங்களூரு,
கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக புகார் கூறிய வழக்கில் அரசியல்வாதியின் மகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக போலீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அரசியல்வாதி மகள் பாதுகாப்பு கேட்டு மனு
கர்நாடகத்தில் செல்வாக்கு படைத்த அரசியல்வாதி ஒருவர் தனது மகளுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் தனக்கு நேர்ந்த பிரச்சினையை எடுத்துக்கூறி மனு தாக்கல் செய்தார். தனக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்திரா ஜெய்சிங், சுனில் பெர்னாண்டஸ் ஆகியோர், பெண்களின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்குமாறு வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
நீதிபதிகள் உத்தரவு
இதுபோன்ற உத்தரவு குடும்ப நல கோர்ட்டுகளில் முறையாக விசாரணை நடத்தப்பட்டு, அங்கு இருந்து தான் வர வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். அப்போது வக்கீல்கள், “பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் இந்த பெண் தனது கணவருடன் செல்ல விரும்பவில்லை என்று கூறுகிறார். இது கேரளாவை சேர்ந்த ஹாதியா என்ற இளம்பெண் மதம் மாறிய வழக்கிற்கு மாறுபட்டது“ என்றனர்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “மனுதாரர் தாக்கல் செய்த மனு, ஆட்கொணர்வு மனுவாக (ஹேபியஸ் கார்பஸ்) கருதப்படும். இந்த பெண்ணுக்கு கர்நாடக போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவருடைய விருப்பத்திற்கு மாறான இடத்திற்கு செல்லும்படி கட்டாயப்படுத்தக்கூடாது“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story