உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக இதுவரை 7 கிலோ தங்கம் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக இதுவரை 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக இதுவரை 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
7 கிலோ தங்கம் பறிமுதல்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 1,255 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 1,156 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் நோக்கத்தில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலக கட்டிடங்களின் 12 ஆயிரத்து 537 சுவர்களில் எழுதப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.
பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 17 ஆயிரத்து 693 சுவரெட்டிகள், 7,711 பேனர்கள் அகற்றப்பட்டன. இது தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதே போல் தனியார் கட்டிட சுவர்களில் எழுதப்பட்டிருந்த 6,866 சுவர் விளம்பரங்கள், 7,949 சுவரொட்டிகள், 2,543 பேனர்கள் அகற்றப்பட்டன. கர்நாடகத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடியே 16 லட்சம் ரொக்கம், ரூ.1.70 கோடி மதிப்புள்ள 7 கிலோ தங்கம், ரூ.11.47 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், 54 சேலைகள், 2 வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
துப்பாக்கிகள் ஒப்படைப்பு
இதுதொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை பறக்கும் படையினர் 216 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். நிலையான கண்காணிப்பு குழுவினர் 53 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கலால் துறை அதிகாரிகள் 11 ஆயிரத்து 711 லிட்டர் மதுபானத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.52 லட்சம் ஆகும். இது தொடர்பாக 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,293 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து உள்ளனர். ஆகமொத்தம் இதுவரை 63 ஆயிரத்து 178 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story