12-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை தாய் திட்டியதால் பரிதாபம்


12-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை தாய் திட்டியதால் பரிதாபம்
x
தினத்தந்தி 12 April 2018 3:38 AM IST (Updated: 12 April 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

தாய் திட்டியதால் மனமுடைந்து 12-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை, 

தாய் திட்டியதால் மனமுடைந்து 12-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாணவர்

மும்பை அந்தேரி அம்போலி பகுதியை சேர்ந்தவர் நிலேஷ் குப்தா(வயது18). 12-ம் வகுப்பு மாணவர். பொதுத்தேர்வு எழுதி முடித்து இருந்தார். விடுமுறையில் வீட்டில் இருந்த அவரை, தனக்கு உதவியாக வீட்டு வேலைகள் எதையும் செய்யவில்லை என்று கூறி, அவரது தாய் அடிக்கடி திட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இது நிலேஷ் குப்தாவுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று இரவு தனது தாயும், சகோதரியும் வெளியில் சென்றிருந்த நேரத்தில் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். சிறிது நேரத்திற்கு பின்னர் வீட்டிற்கு வந்த அவரது தாய் மற்றும் சகோதரி வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது நிலேஷ் குப்தா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த அம்போலி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story