சினிமா தியேட்டரில் இளம்பெண் மானபங்கம் 2 பேர் கைது: ஒருவருக்கு வலைவீச்சு


சினிமா தியேட்டரில் இளம்பெண் மானபங்கம் 2 பேர் கைது: ஒருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 April 2018 3:45 AM IST (Updated: 12 April 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

சினிமா தியேட்டரில் இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

சினிமா தியேட்டரில் இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆபாச வர்ணிப்பு

மும்பை ஜெரிமெரியில் உள்ள ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு 25 வயது இளம்பெண் தனது ஆண் நண்பர் ஒருவருடன் படம் பார்க்க வந்திருந்தார். அவரது ஆண் நண்பர் டிக்கெட் வாங்க சென்றிருந்தார். இந்தநிலையில், இளம்பெண் அணிந்திருந்த ஆடையை பற்றி அங்கிருந்த 3 பேர் ஆபாசமாக வர்ணித்து உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது ஆண் நண்பர் வந்ததும் இதுபற்றி கூறினார்.

2 பேர் கைது

அவர் அந்த ஆசாமிகளை தட்டிக்கேட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை பிடித்து கீழே தள்ளி உள்ளனர். மற்றொருவர் இளம்பெண்ணை மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, சினிமா பார்க்க வந்திருந்தவர்கள், அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பிஓடிவிட்டார். மற்ற 2 பேரையும் பிடித்து சாக்கிநாக்கா போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர்களது பெயர் நஷிர் குரேஷி (வயது42), ரிஸ்வான் சேக் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.

தப்பியோடிய மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story