சென்னை துறைமுகத்தில் போர்க் கப்பல்களை பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு


சென்னை துறைமுகத்தில் போர்க் கப்பல்களை பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு
x
தினத்தந்தி 12 April 2018 4:11 AM IST (Updated: 12 April 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னை துறைமுகத்துக்கு இரண்டு கடற்படை போர்க் கப்பல்கள் வருகை தருகின்றன.

சென்னை,

இந்திய ராணுவ தளவாட கண்காட்சியையொட்டி சென்னை துறைமுகத்துக்கு இரண்டு கடற்படை போர்க் கப்பல்கள் வருகை தருகின்றன. அவற்றை பார்வையிட பொதுமக்கள் 13-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கப்பல்களை பார்வையிட விரும்பும் பொதுமக்கள், தீவுத்திடலில் உள்ள பொருட்காட்சி வளாகத்துக்கு வர வேண்டும்.

அங்கிருந்து பஸ் மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, போர்க் கப்பல்களை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். அங்கு வரும் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி, பாஸ்போர்ட், அரசு அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். கேமரா, பைகள், குடிநீர் பாட்டில், உணவு ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது. பாதுகாப்பு காரணங்களுக்காக 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேற்கண்ட தகவலை பாதுகாப்பு துறை செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது. 

Next Story