அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டில் வெயிலை சமாளிக்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டில் திருவள்ளூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க.வின் திருவள்ளூர் ஒன்றிய செயலாளரும், திருவள்ளூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான புட்லூர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் செவ்வை சம்பத்குமார், மாவட்ட பொருளாளர் ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன், ஊராட்சி செயலாளர் புல்லட் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உதயகுமார், சந்திரன், சுப்பிரமணி, குட்டிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story