கிண்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது


கிண்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2018 4:24 AM IST (Updated: 12 April 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

கிண்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவிகள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்பட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த துணைவேந்தர்களை நீக்கிவிட்டு, தமிழகத்தை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும். கவர்னரின் செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட போவதாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக நேற்று சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 50 பேர் சின்னமலையில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர். சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

உடனே இந்திய மாணவர் சங்கத்தினர் சின்னமலை தாலுகா சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் உள்பட 50 பேரையும் போலீசார் கைது செய்தனர். அனைவரையும் வேனில் ஏற்றி கிண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

Next Story