பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: தி.மு.க. அலுவலகங்களில் கருப்புக்கொடி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அலுவலகங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, சுப்ரீம் கோர்ட்டு 6 வார காலம் அவகாசம் அளித்தும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து தி.மு.க. சார்பில் கடந்த வாரம் தொடர் போராட்டம் நடந்தது. மேலும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே பிரதமர் நரேந்திரமோடி இன்று (வியாழக்கிழமை) தமிழகம் வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. அலுவலகம், நகர தி.மு.க. அலுவலகம் ஆகியவற்றில் நேற்று மாலை கருப்புக்கொடி கட்டப்பட்டது.
Related Tags :
Next Story