நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்– ஊழியர்கள் தர்ணா
பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய ஒருநாள் தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது.
நாகர்கோவில்,
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சுமார் 70 ஆயிரம் டவர்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் தமிழகத்தில் 6700 டவர்களும், குமரி மாவட்டத்தில் 250 டவர்களும் உள்ளன. தற்போது இயங்கும் 70 ஆயிரம் டவர்களை பிரித்து தனி நிறுவனமாக மாற்றும் முடிவை கைவிடக்கோரி அனைத்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய ஒருநாள் தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது. இதேபோல் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ஆல்பர்ட்சிங் தலைமை தாங்கினார். அனைத்து சங்கங்களின் மாவட்ட செயலாளர்கள் ராஜூ, விஜயன், லட்சுமண பெருமாள், செல்வராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முக்கிய நிர்வாகிகள் ராஜன், சிரில் சேவியர், ஜார்ஜ், ராஜேந்திரன் உள்பட 100–க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய போராட்டம் மாலை வரை நடந்தது.

Related Tags :
Next Story