தூத்துக்குடியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான புத்துணர்வு சுற்றுலா கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான புத்துணர்வு சுற்றுலா பயணத்தை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான புத்துணர்வு சுற்றுலா பயணத்தை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
புத்துணர்வு பயணம்
தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒரு நாள் புத்துணர்வு சுற்றுலா பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி அவர்களின் புத்துணர்வு சுற்றுலா பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
புத்துணர்வு சுற்றுலா பயணம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இருந்து தொடங்கி, மணப்பாடு, திருச்செந்தூர் சென்று மீண்டும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு வந்தடைந்தது.
40 பேர்
இந்த பயணத்தில் ஆரம்ப பயிற்சி மையத்தில் படிக்கும் காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகள், 1 முதல் 6 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் என 40 மாணவ–மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் மேலாளர் ரவி, உதவி சுற்றுலா அலுவலர் கோவிந்த ராஜ், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பென்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story