காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 April 2018 4:15 AM IST (Updated: 13 April 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மற்றும் கீரனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, பொருளாளர் குமரேசன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காப்பீடு கழக ஊழியர் சங்க கோட்ட துணைத் தலைவர் அசோகன், சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முகமதலிஜின்னா உள்பட ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குன்னண்டார்கோவில் வட்டார கிளை சார்பில் கீரனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ரட்சகராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வட்டாரச் செயலாளர் ராஜா, பொருளாளர் ஆரோக்கியராஜ் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story