காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 April 2018 2:45 AM IST (Updated: 13 April 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை, 

நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் 

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்–2 விடைத்ததாள்கள் திருத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நெல்லை கல்வி மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகிறது. சுமார் 600–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று காலை தேர்வு மையம் அமைந்துள்ள பள்ளிக்கூட வளாகத்துக்கு ஆசிரியர்கள் வந்தனர்.

பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சார்லஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், “காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள்களை திருத்த வேண்டும்“ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் விடைத்தாள் மையம் முன்பு ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் முதுகலை பட்டதாரி கழக ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் எடிசன், ஜான்சன், செந்தில்குமார், கிருஷ்ணசாமி, ராஜேந்திரன், உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணித்து விடைத்தாள்களை திருத்தினர்.

ஓய்வூதியர்கள் போராட்டம் 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு நெல்லை மாவட்டம் சார்பில் பாளைங்கோட்டை பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள ஜோதிபுரம் திடலில் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். செயலாளர் வைகுண்டமணி முன்னிலை வகித்தார். அ

ப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் குமாரசாமி, நெடுஞ்செழியன், முத்துகிருஷ்ணன், ராஜாமணி, கோபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story