விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஊர்வலம்


விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஊர்வலம்
x
தினத்தந்தி 13 April 2018 3:30 AM IST (Updated: 13 April 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

பொன்னேரி, 

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் அறவழி கண்டன ஊர்வலம் நடத்தினர்.  இந்த ஊர்வலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் விவசாயிகளின் வாழ்வாதரத்தை முழுமையாக பாதிக்கும் இறால் மற்றும் வண்ணமீன்  பண்ணைகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இந்த ஊர்வலம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஹரிஹரன் பஜார் வீதி தேரடித்தெரு வழியாக நடந்தது. பொன்னேரி அம்பேத்கர் சிலை முன்பு கண்டண உரையாற்றினர். இந்த கண்டன ஊர்வலத்தில் 300–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Next Story