கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்; 5 பேர் கைது
கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாமல்லபுரம்,
பிரதமர் மோடி திருவிடந்தை ராணுவ கண்காட்சிக்கு வருவதையொட்டி அவருக்கு ஆலந்தூரில் நடக்கும் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருக்கழுக்குன்றம் பகுதி தி.மு.க.வினர் ஒன்றிய துணை செயலாளர் கடம்பாடி கே.பூபதி தலைமையில் மொத்தம் 5 பேர் ஒரு காரில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பைபாஸ் சாலையில் போலீஸ் தடுப்பை மீறி செல்ல முயன்றனர். அவர்கள் 5 பேரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாமல்லபுரத்தில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் விசுவநாதன் உள்ளிட்ட தி.மு.க.வினரின் வீடுகளின் முகப்பில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story