விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பில் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். அதே போல 12–ம் வகுப்பு விடைத்தாளை திருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களும், கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் சென்னைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதேபோல திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதனை செயல்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் மாநில தலைவர் அருணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலமுருகன், நிர்வாகிகள் சிவக்குமார், பரமானந்தம், குமார், பற்குணன், சுகன்யா, வசந்தி என திரளான ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story