பெரம்பூரில் கூட்டுறவு வங்கி பெண் ஊழியரிடம் 8½ பவுன் சங்கிலி பறிப்பு
சென்னை பெரம்பூரில் 8½ பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்துச்சென்று விட்டார்.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூர் நெல்வாயல் ரோடு சுப்பிரமணியம் தெருவில் வசித்து வருபவர் சத்யசீலா(வயது 30). இவர், பெரம்பூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடைய கணவர் விக்னேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் பலியாகி விட்டார். சத்யசீலா தனது ஒரு மகன், ஒரு மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு தனது பிள்ளைகளுடன் அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்தபோது, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்மநபர், திடீரென சத்யசீலா கழுத்தில் அணிந்து இருந்த 8½ பவுன் டாலர் சங்கிலியை பறித்துச்சென்று விட்டார். இதுபற்றி செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகிறார்.
Related Tags :
Next Story