பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் திடீர் புறக்கணிப்பு
சேலம், ஆத்தூர், தாரமங்கலத்தில் நடக்கும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் திடீரென புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
தமிழகம் முழுவதும் பிளஸ்–2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 1–ந் தேதி தொடங்கி கடந்த 6–ந் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது பிளஸ்–2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தாரமங்கலம் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலத்தில் 1,400 ஆசிரியர்களும், ஆத்தூரில் 900 ஆசிரியர்களும், தாரமங்கலத்தில் 800 ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கவேல், விஜயா ஆகியோர் விடைத்தாள் திருத்தும் பணியை பார்வையிட்டனர்.
சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என கோரிக்கை விடுத்து திடீரென தங்களது பணியை புறக்கணித்தனர். அதாவது, 10 விடைத்தாள் திருத்த வேண்டும் என்றால் 5 மட்டும் திருத்திவிட்டு பாதியை மதிப்பீடு செய்யாமல் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் திருப்பி கொடுத்தனர். ஆத்தூர் மற்றும் தாரமங்கலத்திலும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகளை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், அருள்முருகன் ஆகியோர் கூறியதாவது:–
அரசு மேல்நிலைப்பள்ளி பாடங்களை நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவாக உள்ளது. எனவே, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மொட்டை அடித்தல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணியை முழுவதும் புறக்கணிக்காமல் பாதி விடைத்தாள்கள் மட்டும் திருத்தம் செய்வது என்று முடிவு செய்துள்ளோம். சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணியை பாதி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏற்கனவே அறிவித்தபடி தேர்வு முடிவுகள் வெளியாகுமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் கேட்டபோது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் தான் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்பு செய்கிறார்கள். மற்றபடி உதவி பெறும் பள்ளி, தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பணிகளில் பாதிப்பு ஏற்படாது. ஒருவேளையில் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தால் வேறு ஆசிரியர்கள் மூலம் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும், என்றார்.

Related Tags :
Next Story