மோடியை எதிர்கொள்ளும் தைரியம் எதிர்க்கட்சிகளிடம் இல்லை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
பிரதமர் மோடியை எதிர்கொள்ளும் தைரியம் எதிர்க்கட்சிகளிடம் இ்ல்லை என்று மும்பையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.
மும்பை,
பிரதமர் மோடியை எதிர்கொள்ளும் தைரியம் எதிர்க்கட்சிகளிடம் இ்ல்லை என்று மும்பையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.
உண்ணாவிரத போராட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடங்கியதற்கு காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளை குற்றம்சாட்டி ஆளும் பா.ஜனதா சார்பில் நாடுமுழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மும்பையில் வில்லேபார்லேயில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-
எதிர்கட்சியினர் இடையே உள்ள முரண்பாடுகளை பொதுமக்கள் அறிவார்கள். அவர்களால் இணைந்து செயல்படமுடியாது. பிரதமர் மோடிக்கு மாற்றாக அவர்களிடம் என்ன திட்டம், கொள்கை அல்லது தலைமை இருக்கிறது. எதிர்க்கட்சியினர் ஆட்சி, அதிகாரத்திற்கு வர துடிக்கின்றனர். ஆனால் அவர்களிடம் மோடிக்கு மாற்றாக எதுவுமில்லை. எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை எதிர்கொள்ள தைரியமில்லை. எனவே அவர்கள் நாடாளுமன்றம் செயல்படாமல் முடக்கு கின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் தான் தலித்துகளுக்கு எதிராக அதிகளவில் வன்முறைகள் நடந்தன. தலித், மலைவாழ் மக்களுக்காக தொழில் முனைவோர் திட்டம் மோடி அரசால் தொடங்கப் பட்டுள்ளது.
நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காக பிரதமர் மோடி அர்பணிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் எல்லாவற்றையும் அறிவார்கள். உங்களை அவர்கள் சகித்து கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்தை மதிக்கவும், பாதுகாக்கவும் கற்று கொள்ளும் வரை உங்கள் (காங்கிரஸ்) எம்.பி.க்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டாம். ஜனநாயக மாண்புகளை காப்பாற் றுவதற்கான நமது போராட்டம் தொடரும்.
இவ்வாறு முதல்- மந்திரி தேவேந்திரபட்னாவிஸ் பேசினார்.
Related Tags :
Next Story