திண்டுக்கல்லில், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங் கள் நடந்தன. இந்தநிலையில் நேற்று சென்னையில் ராணுவ கண்காட்சி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வந்தார். சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கட்சி அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட, நகர தி.மு.க. அலுவலகங்களில் நேற்று முன்தினம் இரவே கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தங்களுடைய வீடுகளில் கருப்பு கொடி கட்டினர்.
மேலும் திண்டுக்கல் நகரில் முத்தழகுபட்டி, போடிநாயக் கன்பட்டி, திருமலைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி கட்டி பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல தி.மு.க.வின் கூட்டணி கட்சி அலுவலகங்களிலும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் அனைத்துத்துறை ஓய்வூதியர்களும் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story