வேலை செய்த வீட்டில் ரூ.26 லட்சம் நகைகள் திருடிய வாலிபர் கைது திருட்டு நகைகளை வாங்கிய கடைக்காரரும் சிக்கினார்
வேலை செய்த வீட்டில் ரூ.26 லட்சம் நகைகள் திருடிய வாலிபர் மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
வேலை செய்த வீட்டில் ரூ.26 லட்சம் நகைகள் திருடிய வாலிபர் மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
நகை திருட்டு
மும்பை பாந்திராவை சேர்ந்தவர் நதீர் இராணி. இவரது வீட்டில் உதய் யாதவ்(வயது28) என்ற வாலிபர் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த மாதம் திடீரென அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார். இந்தநிலையில், வீட்டில் இருந்த ரூ.26 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போயிருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த நதீர் இராணி சம்பவம் குறித்து பாந்திரா போலீசில் புகார் கொடுத்தார். அவர் திடீரென பணியில் இருந்து நின்ற வேலைக்காரர் உதய் யாதவ் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்து இருந்தார்.
2 பேர் கைது
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், உதய் யாதவ் ஜார்க்கண்ட் மாநிலம் கிர்டி மாவட்டத்தில் உள்ள சாக் என்ற கிராமத்தில பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணையின் போது, நகைகளை திருடியதை ஒப்புக்கொண்ட அவர், அவற்றை ஒஷிவாராவில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்று விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை மும்பை அழைத்து வந்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், அவரிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடைக்காரர் பரத் ஜெயின் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story