ஈரோட்டில் கருப்பு பலூன் பறக்கவிட்ட தி.மு.க.வினர் 36 பேர் கைது


ஈரோட்டில் கருப்பு பலூன் பறக்கவிட்ட தி.மு.க.வினர் 36 பேர் கைது
x
தினத்தந்தி 13 April 2018 4:18 AM IST (Updated: 13 April 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது.

ஈரோடு,

இந்தநிலையில் ராணுவ கண்காட்சியை பார்வையிடுவதற்காக தமிழகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திரமோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்து கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். மேலும், மு.க.ஸ்டாலின் முழு உருவப்படத்தை பலூனில் கட்டி கட்சியினர் பறக்க விட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இதில் 3 பெண்கள் உள்பட மொத்தம் 36 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் கே.குமார்முருகேஸ், துணைச்செயலாளர் செல்லப்பொன்னி மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ப.மணிராசு, மாணவர் அணி அமைப்பாளர் திருவாசகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் தி.மு.க.வினர் தங்களது வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்.

Next Story