பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் அறை


பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் அறை
x
தினத்தந்தி 13 April 2018 4:49 AM IST (Updated: 13 April 2018 4:49 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் அறையை கலெக்டர் கேசவன் திறந்து வைத்தார்.

காரைக்கால்,

புதுவை மாநிலத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்காக பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அரசு சார்பில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் காரைக்கால் பஸ் நிலைய வளாகத்தில், சென்டேனியல் ரோட்டரி சங்கம் சார்பில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக ஒரு அறை மற்றும் பயணிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சென்டேனியல் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் சுதாகர், ரோட்டரி மாவட்ட ஆளுநர் நியமனம் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் கேசவன் கலந்து கொண்டு தாய்மார்கள் பாலூட்டு அறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து வைத்து பேசினார். அவர் கூறுகையில், பேருந்து நிலையத்திற்கு வரும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக இந்த அறை திறக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையமும் திறக்கப்பட்டுள்ளது. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.

இதில் ரோட்டரி சங்க திட்டத்தலைவர் சுவாமிநாதன், திட்ட உதவித் தலைவர் வாசுதேவன் மற்றும் வைத்தியநாதன், லூர்துராஜ், அனந்துஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story