ஆஸ்திரேலியாவில் சித்திரைத் திருவிழா
கடல் கடந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியில் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி, மெல்போர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் 50 ஆயிரம் தமிழர்கள் வசிக்கின்றனர். இதில் சிட்னி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 30 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர்.
நாங்கள் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை சித்திரைத் திருவிழா என்ற பெயரில் கொண்டாடி வருகிறோம். சிட்னி தமிழர் கலை மற்றும் பண்பாட்டு கழகத்தினர் சார்பாக இந்த திருவிழா கடந்த 5 ஆண்டுகளாக ஏப்ரல் மாதத்தில் சிட்னியில் உள்ள ரோஸ் ஹில் ரேஸ்கோர்ஸ் அரங்கில் கொண்டாடப்படுகிறது.
விழாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மட்டும் இன்றி தமிழர் அல்லாதவர்களும் கலந்து கொள்வார்கள். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலை மற்றும் சித்திரை மாதத்தின் சிறப்பை பறைசாற்றும் விழாவாக சித்திரைத் திருவிழா, ஒரு நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டமாக சிட்னி தமிழ் மக்களின் பேராதரவுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளை சிட்னி வாழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், தமிழகத்தின் கலைஞர்களை அழைத்து வந்து இந்த விழாவில் பங்கேற்க வைப்பார்கள். விழாவில் கரகாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், காளை ஆட்டம், கோலாட்டம், தப்பாட்டம், காளி ஆட்டம், நையாண்டி மேளம் ஆகிய கலைகளை தமிழகத்தில் இருந்து வரும் கலைஞர்கள் நடத்திக் காட்டுவார்கள்.
சித்திரைத் திருவிழா இம்மாத (ஏப்ரல்) இறுதியில் சிட்னியில் நடக்க இருக்கிறது. இதில் நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை மேயர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். உள்ளூர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தமிழர் கண்காட்சி, குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன. தவிர, சிறுவர்கள், இளைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பல்வேறு கலாசார மக்களை ஈர்க்கும் விதமாக தமிழர் உணவு வகைகளை விழா நிகழும் இடத்திலேயே தயாரித்து விற்கும் விற்பனைக் கூடங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை விற்கும் கடைகளும் இடம்பெறும். இந்த விழாவில் பங்கேற்பவர்களிடம் தலா 5 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும்.
மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு ஒத்த வகையில் சிட்னியின் சித்திரைத் திருவிழாவும் நடப்பது சிறப்பாகும்.
- முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன், வழக்கறிஞர், ஆஸ்திரேலியா

Related Tags :
Next Story