கடமை தவறும் காவலர்களுக்கு கடிவாளம்
சீனாவின் ஹன்பின் மாவட்டத்தில் உள்ள அன்காங் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் நடைபெறுகின்றன.
விதிமீறலுக்கு காரணமாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் நடந்து செல்பவர்கள். போக்குவரத்து காவலர்கள் எவ்வளவோ முயன்றும் விதிமீறல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் என்ன செய்தார்கள் தெரியுமா...?
விதிமீறல்கள் செய்வோருக்கு அபராதம் விதிப்பதை நிறுத்திவிட்டு, போக்குவரத்து காவலர்களுக்கு அபராதம் விதிக்க ஆரம்பித்துவிட்டது போலீஸ் துறை.
விதிகளை மதிக்காமல் சாலையைக் கடப்பவர்கள் மூலம் சுமார் 56 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டும். அப்படி வசூலிக்காவிட்டால் போக்குவரத்து காவலர்களின் சம்பளத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயும், ஓவர் டைம் வருமானத்தில் 5 ஆயிரம் ரூபாயும் பிடித்தம் செய்யப்படும் என்று போலீஸ் துறை எச்சரித்திருக்கிறது.
இப்படிச் செய்வதால் 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊழியர்கள் சம்பளமாகப் பெற முடியும். அதனால் போக்குவரத்து காவலர்கள் கவனமாகக் கண்காணித்து விதிமீறுபவர்களிடம் ‘அபராதம்’ வசூலிக்க ஆரம்பித்து விட்டனர்.
# நம்ம நாட்டில் இப்படி ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்தால், பல கோடிகளை சம்பாதிக்கலாம்.

Related Tags :
Next Story