காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
வடுகப்பட்டி ஊராட்சியில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள வடுகப்பட்டி ஊராட்சி தெற்குத்தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்குழாய் மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென ஆழ்குழாய் மின்மோட்டார் பழுதானது. இதனால் கடந்த 6 மாத காலமாக இப்பகுதியின் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் கந்தவர்கோட்டை- செங்கிப்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்பெக்டர் பிரபு, ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர்கள் நலதேவன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், பழுதான மின்மோட்டாரை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் கந்தர்வகோட்டை -செங்கிப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story