எட்டயபுரம் அருகே சைக்கிளில் தவறி விழுந்து காயம் அடைந்த மாணவியை ஆஸ்பத்திரிக்கு காரில் அனுப்பி வைத்த கலெக்டர்
எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையை அடுத்த குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்தவர் சுடலையாண்டி மகள் கலைச்செல்வி (வயது 14).
எட்டயபுரம்,
எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையை அடுத்த குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்தவர் சுடலையாண்டி மகள் கலைச்செல்வி (வயது 14).
இவர் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் சிந்தலக்கரை வரையிலும் சைக்கிளில் சென்று விட்டு, அங்கிருந்து எட்டயபுரத்துக்கு பஸ்சில் செல்வது வழக்கம்.
நேற்று மதியம் பள்ளிக்கூடத்தில் நடந்த ஆண்டு இறுதி தேர்வை எழுதுவதற்காக கலைச்செல்வி உள்ளிட்ட மாணவிகள் சைக்கிளில் சிந்தலைக்கரைக்கு புறப்பட்டு சென்றனர். காட்டு பகுதி வழியாக சென்றபோது, மாணவி கலைச்செல்வியின் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் பாய்ந்ததில், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார்.
அப்போது அந்த வழியாக காரில் சென்ற மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், உடனே தனது காரை நிறுத்தி கீழே இறங்கி, மாணவி கலைச்செல்வியிடம் விவரங்களை கேட்டு அறிந்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் தன்னுடன் வந்த மற்றொரு காரில் மாணவி கலைச்செல்வியை ஏற்றி, எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மாணவி கலைச்செல்வியை மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story