திருச்செந்தூர் அருகே பள்ளிக்கூட மாணவன் மாயமான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
திருச்செந்தூர் அருகே பள்ளிக்கூட மாணவன் மாயமான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் அருகே பள்ளிக்கூட மாணவன் மாயமான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாணவன்
நெல்லை மாவட்டம் புளியங்குடி ஜின்னாநகர் 4–வது தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி. இவருடைய மகன் செய்யது அபுதாகிர் (வயது 15). இவர் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி சுலைமானியா அரபி மதரசாவில் தங்கி இருந்து சமயக்கல்வியும், வெள்ளாளன் விளை பிஷப் அசரியா மேல்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பும் படித்து வந்தார்.
கடந்த 16–01–17 அன்று இரவு மதரசாவில் இருந்து செய்யது அபுதாகிர் வெளியில் சென்றாராம். அதன்பிறகு அவர் மீண்டும் மதரசாவுக்கு வரவில்லையாம். இது தொடர்பாக மதரசா பொறுப்பாளர் காபர்கான் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார்
இந்த நிலையில் அக்பர்அலி தனது மகனை விரைந்து கண்டுபிடித்து தரக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மாணவன் மாயமான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், மாணவன் மாயமானது தொடர்பான ஆவணங்களை வாங்கி வழக்குப்பதிவு செய்து மாணவன் செய்யது அபுதாகிர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story