குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பெரியநாயக்கன்பாளையம் அருகே பெட்டதாபுரத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெ.நா.பாளையம்,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் பிளிச்சி ஊராட்சி அருகே பெட்டதாபுரம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் 4 போர்வெல் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 4 போர்வெல்களிலும் தண்ணீர் இல்லை. இதனால் அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் இங்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு வினியோகிக்கப்படும் குடிநீர் இந்த பகுதி பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் குடிநீர் கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். கடந்த 6 மாதங்களில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 10.30 மணியளவில் மத்தம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் எங்கள் கிராமத்திற்கு தேவையான அளவு குடிநீர் வழங்க அரசு அதிகாரிகள் உறுதியளிக்க வேண்டும் என்றனர். மேலும் குடிநீர் கேட்டு கோஷங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா அங்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும் போராட்டத்தின்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்சுகளுக்கு பொதுமக்களே வழி ஏற்படுத்தி தந்தது குறிப் பிடத்தக்கது.

Related Tags :
Next Story