கிணற்றை சீரமைத்து, பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும்
மொரப்பூர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கிணற்றை சீரமைத்து, பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொரப்பூர்,
தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூர் பகுதி ஒரு மைய பகுதியாகும். ரெயில் நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி பள்ளி மற்றும் கல்லூரி போன்ற அனைத்து வசதிகளும் நிறைந்த இப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க போலீஸ் நிலையம் மொரப்பூர் அருகே உள்ள எம்.வேட்ரப்பட்டியில் கடந்த 1950-ம் ஆண்டில் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்னர் பொதுமக்களின் வசதிக்காக மொரப்பூரில் 24.10.1986-ல் தார்சு கட்டிடத்தில் புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது.
அப்போது இந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் குடும்பத்துடன் தங்கி பணிபுரியம் வகையில் சீமை ஓடுகளால் வேயப்பட்ட 10 காவலர் குடியிருப்பு வீடுகளும் கட்டப்பட்டு, இவர்களின் பயன்பாட்டிற்கு குடியிருப்பு மைய பகுதியில் ஒரு குடிநீர் கிணறும் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் குடிருப்பு வீடுகள் பழுதடைந்து வந்தது. இதனை சீரமைக்காததால் குடியிருக்க இயலாத சூழல் ஏற்பட்டு விட்டது. இதனால் இந்த குடியிருப்பில் யாரும் குடியில்லாததால் குடிநீர் கிணறும் பயன்பாடின்றி போய்விட்டது.
இதற்கிடையில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்ட வேண்டி அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் கடந்த ஆண்டு புதிய அடுக்கு மாடி காவலர் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு அது காவலர்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இந்த குடியிருப்பு வீடுகளை ஒட்டி பழைய குடிநீர் கிணறு அப்படியே உள்ளது.
இந்த கிணற்றின் மேற்பகுதி எவ்வித பாதுகாப்பு வளையங்களும் இல்லாமல் திறந்த வெளியில் உள்ளது. இதனால் காவலர் குடும்பங்களின் குழந்தைகள் விளையாட்டு தனமாக கிணற்றின் அருகில் செல்லும்போது ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பொதுமக்களும் இந்த கிணற்றை ஒட்டியுள்ள வழியாகத்தான் பஸ் நிலையத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் முன்னர் இந்த கிணற்றிற்கு பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் எனவும், கிணற்றை சீரமைத்து பயன்பாட்டிற்கு விடவேண்டும் எனவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story