போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் குறுகலாக இருக்கும் மருதமலை ரோட்டை அகலப்படுத்த வேண்டும், வாகன ஓட்டிகள் கோரிக்கை
போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் குறுகலாக இருக்கும் மருதமலை ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடவள்ளி,
முருகப்பெருமானின் ஏழாவது படை வீடு என்று அனைவராலும் போற்றப்படுகிறது மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்த கோவில் கோவையில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது. மலை மீது இருக்கும் இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
கோவையில் இருந்து மருதமலை செல்லும் வழியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம், அரசு சட்ட கல்லூரி ஆகியவை உள்ளன. இந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கோவை- மருதமலை ரோட்டில் உள்ள லாலி ரோடு சிக்னலில் இருந்து வடவள்ளி வரை சாலை அகலப்படுத்தப்பட்டு, நடுவில் தடுப்பான் வைக்கப்பட்டது.
இருவழிச்சாலையாக இருந்த ரோடு 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டதால், அங்கு போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் வடவள்ளியில் இருந்து மருதமலை அடிவாரம் வரை 4 கி.மீ. தூரம் உள்ள சாலை அகலப்படுத்தப்படவில்லை. அது அப்படியே விடப்பட்டது. இதனால் அந்த ரோடு குறுகலாகவே இருக்கிறது.
தற்போது இந்த சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை 8 மணி முதல் 10 மணி வரை பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம், அரசு சட்ட கல்லூரிக்கு மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கார்கள், இருசக்கர வாகனங்களில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
ஒரு இடத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டால், ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே வடவள்ளியில் இருந்து மருதமலை அடிவாரம் வரை குறுகலாக இருக்கும் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர், அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
வடவள்ளியில் இருந்து மருதமலை அடிவாரம் வரை பெரியார் நகர், அருண் நகர், கல்வீரம்பாளையம், நவாவூர் பிரிவு, பொம்மனம்பாளையம், ஐ.ஓ.பி. காலனி, இந்திராநகர் உள்பட பல்வேறு சிறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவைக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த ரோட்டில்தான் செல்ல வேண்டும். இது தவிர கோவையில் இருந்து தொண்டாமுத்தூருக்கு செல்ல பெரும்பாலானவர்கள் வேளாண் பல்கலைக்கழகம், பி.என்.புதூர், வடவள்ளி, பொம்மனம்பாளையம் வழியாக ஓணாப்பாளையம் சென்று அதன் பின்னர் தொண்டாமுத்தூர் செல்கிறார்கள். அதுபோன்று கணுவாய் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் தொண்டாமுத்தூர் செல்ல நவாவூர் பிரிவு வந்து, பின்னர் பொம்மனம்பாளையம், ஓணாப்பாளையம் வழியாக செல்கிறார்கள். இவ்வாறு இந்த ரோடு பலருக்கு திட்ட சாலையாகவும் பயன்படுவதால், நாளுக்குநாள் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது இந்த ரோடு 7 மீட்டர் அகலத்தில் இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவேதான் குறுகலாக இருக்கும் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். கடந்த 2010-ம் ஆண்டில் லாலி ரோட்டில் இருந்து வடவள்ளி வரை ரோடு அகலப்படுத்தும்போது, மருதமலை அடிவாரம் வரை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
அதற்கு அதிகாரிகள், விரைவில் அகலப்படுத்தப்படும் என்று கூறினார்கள். ஆனால் 8 வருடங்கள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வடவள்ளியில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம் வரை 3 கி.மீ. தூரத்துக்கு ரூ.10 கோடியில் ரோடு அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது. விரைவில் நில அளவீடு செய்து, நிலம் கையகப்படுத்திய பின்னர் பணிகள் தொடங்கப்படும். இந்த சாலை 15½ மீட்டர் அகலத்தில் 4 வழிச்சாலையாக அமைக்கப்படும்.
இந்த பணி முடிவடைந்த பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து மருதமலை அடிவாரம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அகலப்படுத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story