அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை அருகே கர்நாடக லாரியை சிறைபிடித்து கொ.ம.தே.க.வினர் மறியல்-ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை அருகே கர்நாடக லாரியை சிறைபிடித்து கொ.ம.தே.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டமும் நடந்தது.
அந்தியூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி எதிர்க்கட்சியினர், பல்வேறு அமைப்பினர் சாலை மறியல், ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் கருப்பு கொடி காட்டியும், கருப்பு சட்டை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தமிழகத்துக்கு ஆதரவாக பேசி வருவதாக கூறி ரஜினிகாந்த், கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினரும் தமிழக எல்லையில் போராட்டம் நடத்தினார்கள்.
இந்தநிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் துரைராஜா தலைமையில் நிர்வாகிகள் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை சோதனை சாவடி அருகே நேற்று காலை 9 மணி அளவில் ஒன்று திரண்டார்கள். பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோஷங்களும் எழுப்பினார்கள். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
அப்போது அந்த வழியாக கர்நாடகத்தில் இருந்து அந்த மாநில பதிவெண் கொண்ட லாரி, மக்காச்சோள பாரம் ஏற்றிக்கொண்டு ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை கொ.ம.தே.க.வினர் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கொ.ம.தே.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் கூறும்போது, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அரசிடம் சென்று முறையிடுங்கள். இவ்வாறு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலை மறியலிலோ அல்லது வாகனத்தை சிறைபிடிக்கவோ கூடாது.’ என்றனர்.
அதை ஏற்றுக்கொண்ட கொ.ம.தே.க.வினர் அங்கிருந்து 9.30 மணி அளவில் கலைந்து சென்றனர். இதனால் அந்தியூர்-பர்கூர் ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story