கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி நத்தக்காடையூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருப்பூரை அடுத்த நத்தக்காடையூரில் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் கவன ஈர்ப்பு உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் கடைவீதியில் நேற்று காலை 11 மணிக்கு கவன ஈர்ப்பு உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் செ.நல்லசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கண்ணுச்சாமி, விஸ்வநாதன், ஏ.கே.சுப்பிரமணி, ஐக்கிய விவசாயிகள் சங்கதலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலைவகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் வக்கீல் துளசிமணி அனைவரையும் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி வடிநிலத்தில் உள்ள பவானிசாகர் அணை நீர் நிர்வாகம் காவிரி தீர்ப்பின்படியே நடத்தப்பட வேண்டும், கடந்த 60 ஆண்டுகளாக விருப்பு, வெறுப்பு, ஆதாய அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் தவறான நீர் நிர்வாகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பவானிசாகர் அணையில் இருந்து பாசனம் பெறும் கீழ்பவானி பாசனத்திற்கும், பழைய பவானி பாசனங்களான கொடிவேரி, காளிங்கராயன் பாசனங்களுக்கும் காவிரி தீர்ப்பின் விகிதாச்சாரப்படி நீர் பங்கீடு வழங்க வேண்டும்
பவானிசாகர் அணை முதல் பவானி வரை உள்ள பவானி ஆற்று கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ஆற்றோரத்தில் குழாய் பதித்து குடிநீர் வழங்க வேண்டும், ஆலைகள், அனுமதியற்ற பாசனங்கள் தண்ணீர் திருட்டினை தடுத்து லஞ்ச-லாவண்ய முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்பவானி பாசன விவசாயிகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். முடிவில் வருகிற 20-ந்தேதி கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்புக்கான அரசு ஆணையை தமிழக அரசு வெளியிடாவிட்டால் வருகிற 27-ந்தேதி காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை ஏராளமான கீழ்பவானி விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் வெங்கடாசலம், செயலாளர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் நைனாமலை மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகள், சுற்றுவட்டார பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story