கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது ‘இந்தியா டுடே’ கருத்து கணிப்பில் தகவல்


கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது ‘இந்தியா டுடே’ கருத்து கணிப்பில் தகவல்
x
தினத்தந்தி 14 April 2018 2:46 AM IST (Updated: 14 April 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றும் ‘இந்தியா டுடே‘ கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றும் ‘இந்தியா டுடே‘ கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தொங்கு சட்டசபை அமையும்

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஜனதா தளம்(எஸ்) மற்றும் பா.ஜனதா கட்சிகள் முதல் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன. காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதற்கான பணிகளில் அக்கட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடையே எதிர்ப்பு அலை இல்லை என்று பரவலாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ‘இந்தியா டுடே‘ என்ற பிரபல ஆங்கில செய்தி சேனல் கர்நாடக தேர்தல் பற்றி ஒரு கருத்து கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை நேற்று வெளியிட்டது. அதில், கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் 90 முதல் 101 தொகுதிகளிலும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா 78 முதல் 86 தொகுதியிலும், மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ) 34 முதல் 43 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. சுயேச்சைகள் 4 முதல் 7 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது எனவும், கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் இந்த கருத்து கணிப்பு கூறுகிறது.

ஓட்டு வித்தியாசம் 2 சதவீதம்

ஆளும் காங்கிரசுக்கு 37 சதவீத வாக்குகளும், பா.ஜனதாவுக்கு 35 சதவீத ஓட்டுகளும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 19 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என்று அந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் 2 சதவீதம் மட்டுமே.

இன்னும் தேர்தலுக்கு சரியாக 28 நாட்கள் இருக்கின்றன. இந்த நாட்கள் தான் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமான பிரசாரத்தை நடத்துவார்கள். அதன் அடிப்படையில் நடுநிலையாளர் ஓட்டுகள் மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

Next Story