ஏழைகளுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட இலவச வீடுகளில் அரசு ஊழியர்கள் வசித்து வருவது அம்பலம்
ராஜீவ்காந்தி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவசமாக கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளில் அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் வசித்து வருவது லோக் அயுக்தா போலீசாரின் சோதனையில் அம்பலமானது.
கோலார் தங்கவயல்,
ராஜீவ்காந்தி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவசமாக கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளில் அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் வசித்து வருவது லோக் அயுக்தா போலீசாரின் சோதனையில் அம்பலமானது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
விசாரணை
கோலார் டவுன் 2-வது மற்றும் 3-வது வார்டுகளில் மத்திய அரசின் ராஜீவ்காந்தி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. சம்பந்தப்பட்ட வீடுகளில் பயனாளிகள் வசிக்காமல், வேறு நபர்கள் வசித்து வருவதாக லோக் அயுக்தா போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று கோலார் மாவட்ட லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பவன் குமார் மற்றும் போலீசார் கோலார் டவுன் 2-வது மற்றும் 3-வது வார்டுகளுக்கு சென்று வீடு, வீடாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சில வீடுகளில் சம்பந்தப்பட்ட பயனாளிகள் வசிக்காமல் வேறு நபர்கள் வசித்து வருவதும், சில வீடுகளில் அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் வசித்து வருவதும் கண்டறியப்பட்டது. மேலும் சில வீடுகள் வசதி படைத்தவர்களின் பெயர்களில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
நடவடிக்கை எடுக்கப்படும்
பின்னர் தங்களுக்கு கிடைத்த தகவல்களை லோக் அயுக்தா போலீசார் பதிவு செய்து கொண்டனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
Related Tags :
Next Story