இடமாறுதலுக்கான கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
ஆசிரியர்களுக்கு இடமாறுதலுக்கான கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை,
ஆசிரியர்களுக்கு இடமாறுதலுக்கான கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் முருகேசன், மாவட்ட செயலாளர் பால்ராஜ், மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பிரம்மநாயகம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கலந்தாய்வு
தமிழகத்தில் தொடக்கக் கல்வி துறையின் கீழ் 529 அரசு பள்ளிகள், 436 மாநகராட்சி பள்ளிகள், 839 நகரசபை பள்ளிகள், 28 ஆயிரத்து 42 பஞ்சாயத்து யூனியன் பள்ளிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 846 அரசு பள்ளிகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் 34 அரசு பள்ளிகள், 23 நகரசபை பள்ளிகள், 26 மாநகராட்சி பள்ளிகள், 663 பஞ்சாயத்து யூனியன் பள்ளிகள் என மொத்தம் 746 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மேற்கண்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் மே மாதம் கோடை விடுமுறை நாட்களில் நடைபெறும். கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்களிடம் இருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் மாறுதல் விண்ணப்பங்கள் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் மூலம் பெறப்படும். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் பணி மூப்பின் அடிப்படையில் ஒன்றியம் வாரியாக கலந்தாய்வு நடத்தப்படும். மே மாத இறுதிக்குள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
கோடை விடுமுறையில்...
இந்த ஆண்டு இதுவரை முன்னுரிமை பட்டியல் வெளியிடுவது பற்றியோ? கலந்தாய்வு பற்றியோ எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. மாணவர்களின் நலனுக்காக அரசு கோடை விடுமுறை நாட்களில் கலந்தாய்வு நடந்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story