அரிவாளுடன் சுற்றித்திரிந்த 4 வாலிபர்கள் கைது


அரிவாளுடன் சுற்றித்திரிந்த 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 14 April 2018 4:21 AM IST (Updated: 14 April 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

கொடுங்கையூரில் அரிவாளுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்

கொடுங்கையூர் பகுதியில் சிலர் அரிவாளுடன் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி வருவதாகவும், பொது மக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை மீனாம்பாள் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை நடத்தியபோது, அரிவாள்கள் வைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அரிவாளுடன் சுற்றித்திரிந்த 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

4 பேர் கைது

விசாரணையில் அவர்கள், காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த குகன் (வயது 23), கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் (23), வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவைச் சேர்ந்த தண்டபாணி (24), வியாசர்பாடி கணேசபுரத்தைச் சேர்ந்த தீபக் (22) என்பதும், இவர்கள் மீது கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story