கல்பாக்கம் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; பிளஸ்-2 மாணவர் பலி


கல்பாக்கம் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; பிளஸ்-2 மாணவர் பலி
x
தினத்தந்தி 14 April 2018 4:28 AM IST (Updated: 14 April 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக பலியானார்.

கல்பாக்கம், 

கல்பாக்கத்தை அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் நேதாஜி (வயது 18). புதுப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை தனது நண்பர்கள் விக்னேஷ் (16), கோவர்த்தன் (16) ஆகியோருடன் புதுப்பட்டினம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக 3 பேரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். விட்டிலாபுரம் சந்திப்பு அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை இவர்கள் முந்தி செல்ல முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு பஸ் எதிர் பாராதவிதமாக மோட்டர் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்தது. விபத்து குறித்த தகவலறிந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேதாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story