ஜல்லிக்கட்டில் வாலிபர் பலி வயல்வெளிக்கு ஓடிய காளையை பிடிக்க முயன்ற போது பரிதாபம்
பூலாம்பாடி ஜல்லிக்கட்டில், மைதானத்தில் இருந்து வயல்வெளிக்கு ஓடிய காளையை பிடிக்க முயன்றபோது, காளை முட்டியதில் வாலிபர் பலியானார்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 472 காளைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. இவைகளை கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், 19 காளைகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு 453 காளைகள் மட்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர்.
இதேபோல் மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து தகுதியுள்ள 275 பேரை மட்டுமே காளைகளை பிடிக்க அனுமதித்தனர். இதில் மாடுபிடி வீரர்கள் 2 கட்டங்களாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி,் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் துள்ளிக்குதித்து ஓடின. சில காளைகள் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தின.
அதிவேகமாக பாய்ந்து வந்த காளைகளை காளையர்கள் சிலர் திமிலை லாவகமாக பிடித்து அடக்கினர். இந்நிலையில் வாடிவாசலில் இருந்து ஒரு காளை வெளியே வந்து வீரர்களிடம் பிடிபடாமல் வயல்வெளி பகுதியை நோக்கி ஓடி சென்றது. அந்த காளையை பிடித்து வண்டியில் ஏற்ற சேலம் மாவட்டம் கொண்டையம்பள்ளியை சேர்ந்த கதிரேசன் மகன் பாலமுருகன் (வயது 21) என்பவர் முயன்றார். அப்போது, காளை முட்டியதில் அவர் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதே ஊரை சேர்ந்த நண்பர் பூபாலன் என்பவரது மாட்டை பிடித்துக் கொடுக்க முயன்றபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.
மேலும் இந்த ஜல்லிக்கட்டில் அரசலூர் செந்தில்குமார் (20), கடம்பூர் பிரவீன் (21), நெய்குப்பை தமிழ்குமார் (13), அ.மேட்டூர் பொன்னுசாமி(53), அன்னமங்கலம் ஜோசப் (34), பெரம்பலூர் மாதேஷ் (24), மதுரையை சேர்ந்த லோகநாதன் (29) உள்பட 44 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடிவீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் நாற்காலி, சைக்கிள், கியாஸ் அடுப்பு, வேட்டி மற்றும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாடுகளின் உரிமையாளர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) செல்வராஜ், தாசில்தார் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story