மாத்தூர் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாத்தூர் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையை அடுத்த மாத்தூர் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன். இந்த ஊரட்சியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாய்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் கழிவு நீர் செல்லமுடியாமல் உள்ளது.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் உள்பட அனைவருக்கும் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு தற்போது விடுமுறை காலம் என்பதால் சாலைகளில்தான் விளையாடுகின்றனர். இதே போல் காற்றில் பறந்து வரும் பிளாஸ்டிக் குப்பைபைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். குப்பைகளை கொட்டுவதற்கு கூடுதல் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story