பெற்றோர் வராததால் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க சார்பதிவாளர் மறுப்பு: பெண்ணை உறவினர்கள் இழுத்து சென்றதால் பரபரப்பு
சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற்றோர் வராததால் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க சார்பதிவாளர் மறுத்து விட்டார். இதற்கிடையே பெண்ணை அவரது உறவினர்கள் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் மெதூர் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன். டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரும் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இருவரும் திருமணம் செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர்.
சிவசங்கரனுடன் அவரது உறவினர்களும் நண்பர்களும் உடன் சென்று இருந்தனர். சார்பதிவாளர் பாலச்சந்தர், “காதல் ஜோடியை பார்த்து பெண்ணின் பெற்றோர் அலுவலகத்துக்கு வந்து சம்மதம் தெரிவித்தால்தான் திருமணம் செய்து வைக்க முடியும்” என்று கூறி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து சிவசங்கரனின் உறவினர்கள், நண்பர்கள் சார்பதிவாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனைத்து ஆதாரங்களும் உள்ள போதும் திருமணத்தை பதிவு செய்ய ஏன் மறுக்கிறீர்கள் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். இதனால் சார்பதிவாளர் பாலச்சந்தர் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Tags :
Next Story