போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய வழக்கு: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மேலும் ஒருவர் கைது


போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய வழக்கு: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 15 April 2018 4:15 AM IST (Updated: 15 April 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ. மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் கடந்த 10-ந் தேதி அண்ணா சாலையில் முற்றுகை போராட்டம் நடந்தது.

கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியானது. இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி உள்பட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீசாரை தாக்கிய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி செயலாளர் ஆல்பர்ட் ஸ்டாலினை (வயது 32) போலீசார் கைது செய்துள்ளனர். 

Next Story