பிறந்தநாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருச்சி,
சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் குமார் எம்.பி. தலைமையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி முன்னிலையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. வடக்கு மாவட்ட தலைவர் கலை, தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கணேஷ் மாலை அணிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் நந்தா செந்தில் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. வடக்கு மாவட்ட தலைவர் ரவீந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் குணா உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் புறநகர் மாவட்ட செயலாளர் இந்திரஜித், பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தங்க.ராஜைய்யன், தி.க. சார்பில் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், புதிய தமிழகம் சார்பில் மாவட்ட செயலாளர் சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அருள், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில துணைத்தலைவர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
இதேபோல் மக்கள் மறு மலர்ச்சி கழகம், ஆதிதமிழர்பேரவை, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனையொட்டி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
துறையூர் பஸ் நிலையத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழச்சிக்கு துறையூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் சிவா(கிழக்கு), பெரியசாமி (மேற்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில், மாவட்ட ஆதிதிராவிடர் நல குழுவினர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடினர். விழாவிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் மகாலிங்கம் தலைமை தாங்கி அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உப்பிலியபுரம் அருகேயுள்ள மாராடி கிராமத்தில், பா.ஜ.க. வினர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடினார்கள். விழாவிற்கு மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரமலை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் உப்பிலியபுரம் ஒன்றிய தலைவர்் வைரி.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணிகண்டம் அருகே உள்ள அம்பேத்கர் நகரில், மணிகண்டம் ஒன்றிய பா.ஜ.க. செயலாளர் அமிர்தகடேஸ்வரர் தலைமையில் அம்பேத்கரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story