சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: ஊட்டியில் கோடை சீசன் களை கட்ட தொடங்கியது
ஊட்டியில் கோடை சீசன் களை கட்ட தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இந்த சீசன் காலங்களில் ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் கோடை விழாக்கள் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி ஊட்டியில் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகுகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அங்கு பராமரிப்பு பணிக்காக பெரிய புல்வெளி மைதானம் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் உள்ளே செல்லாமல் இருக்க கயிறு கட்டப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்குள்ள மரங்களுக்கு கீழே தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தனர். அதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்ததை காண முடிந்தது.
ஊட்டியில் கோடை சீசன் களை கட்ட தொடங்கி உள்ளதால் சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா அணை, பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு சுற்றுலா தலங்களுக்கு சென்றதால், அந்த வழியாக வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

Related Tags :
Next Story