கோவில் திருவிழாக்களின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை தேவை, மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களின்போது இருபிரிவினர் இடையே சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதும், ஒரு பிரிவினர் வழிபாட்டுக்கு வரும் போது மற்றொரு பிரிவினர் பிரச்சினை செய்வதுமாக கிராமங்களில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையை தவிர்க்க மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மோதல்கள் ஏற்படும் நிலையும் உள்ளது.
பொதுவாக வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்புநாள் நிகழ்ச்சியின் போது பல்வேறு கிராம மக்கள் தங்கள் பகுதியில் கோவில்திருவிழாக்களை நடத்துவதில் பிரச்சினைகள் உள்ளதாகவும், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க கோரி மனுக்கள் கொடுத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அந்த மனுக்களை அப்பகுதியை சேர்ந்த வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனுப்பி வைத்தாலும் நடவடிக்கை எடுக்காத நிலையே தொடர்கிறது.
வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் முளைப்பாரி ஊர்வலமாக வந்தபோது பிரச்சினை ஏற்பட்டதால் அந்த பிரிவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு ஆட்சேபனை தெரிவித்தும், கோவில் திருவிழாவை சுமூகமாக நடத்த உரிய நடவடிக்கை கோரியும் கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்து சென்றனர். இதே போன்று கொத்தனேரி கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் எரிச்சநத்தம் கோவில் திருவிழாவுக்கு அக்னிசட்டி எடுத்துவந்த போது மற்றொரு பிரிவினர் பெண்கள் மீது கற்களை வீசியதாகவும் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடமும், போலீஸ் சூப்பிரண்டிடமும் நேரடியாக மனு கொடுத்து சென்றுள்ளனர். இதேபோன்று கோவில் திருவிழாவை நடத்த உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி நீதிமன்றங்களை அணுகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக பங்குனி, சித்திரை மாதங்களில் மாவட்டத்தில் கோவில்திருவிழாக்கள் அதிகம் நடைபெறுவதுண்டு. நகர்புறங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அதிக கவனம் செலுத்தும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் கிராமப்புறங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் போதிய அக்கறை காட்டாத நிலை ஏன் என்று தெரியவில்லை. இதனால் தான் கிராமப்புறங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களின் போது சட்டம்-ஒழங்கு பிரச்சினைகள் அதிகம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கோவில் திருவிழா நடைபெறுவதற்கு முன்னரே மாவட்ட போலீஸ் நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story