பிரதமர் மோடியின் ஏஜெண்டாக ரங்கசாமி செயல்படுகிறார் - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
மத்திய அரசை கண்டித்து புதுவையில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ரங்கசாமி ஆதரவு தரவில்லை. அவர் பிரதமர் மோடியின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் கடந்த 12-ந் தேதி சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டினர்.
2 ஆண்டுகளாக வாயைமூடி மவுனமாக இருந்த ரங்கசாமி தற்போது பேச ஆரம்பித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் தனிப்பட்ட முறையில் என்னை விமர்சனம் செய்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், காவிரி மேலாண்மை விவகாரம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை பலமுறை கூட்டினோம்.
அதில் ஒருமுறை மட்டும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ. கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அந்த கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் அந்த கூட்டத்தை புறக்கணித்தார். விவசாயிகள் மீது ரங்கசாமிக்கும், என்.ஆர். காங்கிரசுக்கும் அக்கறை இல்லை என்பதை இதுகாட்டுகிறது.
காவிரி நீரை பெற அவரது ஆட்சி காலத்தில் வழக்கு போட்டதாக கூறியுள்ளார். அந்த வழக்கை பின்பற்றி 2 வெற்றிகளை காங்கிரஸ் அரசு பெற்றுள்ளது. அதாவது இடைக்கால உத்தரவில் 6 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்று இருந்ததை 7 டி.எம்.சி.யாக உயர்த்தி பெற்றது. மேலும் தமிழகத்திற்கு குறுவை சாகுபடி செய்ய அனுமதி அளிக்காத நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் பகுதியில் குறுவை சாகுபடி செய்யவும் அனுமதிபெற்றுள்ளோம்.
அனைத்து கட்சி கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் தரவில்லை. ஒட்டுமொத்தமாக ரங்கசாமி காவிரி நதிநீர் விஷயத்தில் மோடிக்கு ஆதரவாக செயல்படுகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 5-ந்தேதி புதுவையில் அனைத்து கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆதரவு தரவில்லை. இதன் மூலம் பிரதமர் மோடியின் ஏஜெண்டாக ரங்கசாமி செயல்படுவது தெளிவாக தெரிகிறது.
சென்னையில் நடைபெற்ற ராணுவ தளவாட கண்காட்சியில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்று கூறுகின்றார். கடந்த 24.2.2018 அன்று பிரதமர் மோடியை நானும், அமைச்சர்களும் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினோம். 9.3.2018 அன்று நினைவூட்டல் கடிதம் அனுப்பினேன். கடந்த மாதம் 26-ந் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் அனுப்பி வைத்தேன். தீர்மானத்தை நிறைவேற்றிய போது என்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் இல்லை. காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் இதுவரை காவிரி பிரச்சினை தொடர்பாக வாய் திறக்கவே இல்லை.
தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர். ஆனால் இதுவரை பதில் இல்லை. எனவே இதில் உண்மையான நிலை என்ன என்பதை ரங்கசாமி புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் அவர் ஏன் பிரதமரை சந்திக்கவில்லை? என்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மோடிக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் கையை தூக்குகின்றார்.
பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ஏன் கேட்கவில்லை. பிரதமர் மோடிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவாக செயல்படும் ரங்கசாமி எங்களை விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 2 ஆண்டுகளாக தூங்கிக்கொண்டு இருந்த அவர் தற்போது விழித்து எங்கள் அரசு தூங்குவதாக பேட்டி கொடுக்கிறார். டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை சந்தித்ததற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். அப்போது அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை.
என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டில் 10 முறைதான் இலவச அரிசி வழங்கப்பட்டது. முதியோர் பென்ஷன் 7 மாதங்களுக்கு ஒருமுறை தரப்பட்டது. பாப்ஸ்கோ, பாசிக் போன்ற அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் போடவில்லை. ஆனால் தற்போது உரியநேரத்தில் முதியோர் பென்ஷன் வழங்கி வருகிறோம். நாங்கள் மக்களுக்கு அரிசி கொடுக்க வலியுறுத்துகிறோம். கவர்னர் பணமாக தர கூறுகின்றார். மாதந்தோறும் டெண்டர் விட கோருகின்றார். 6 மாதத்திற்கு ஒருமுறைதான் டெண்டர் விட முடியும்.
சிக்கன நடவடிக்கையால் கடந்த நிதி ஆண்டில் ரூ.180 கோடி வருமானத்தை உயர்த்தியுள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் அரசு வாங்கிய கடனையும் திருப்பி கொடுத்துள்ளோம். சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் புதுச்சேரிமுதலிடத்தில் உள்ளது.
எதிர்க்கட்சியாக இருந்து செய்ய வேண்டிய வேலைகளை என்.ஆர்.காங்கிரஸ் செய்யவில்லை. எங்கள் அரசுக்கு ரங்கசாமியிடம் இருந்து நற்சான்றிதழ் தேவை இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் காரைக்கால் பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் அனுப்ப உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அமைச்சர் கமலக்கண்ணன், லட்சுமிநாராயணன் எல்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story