ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஒரத்தநாட்டில் பேரணி-பொதுக்கூட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஒரத்தநாட்டில் பேரணி- பொதுக்கூட்டம் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் நடைபெற்றது.
ஒரத்தநாடு,
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, சாகர்மாலா, கூடங்குளம், ஸ்டெர்லைட் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை எதிர்த்தும், காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் ஒரத்தநாட்டில் பேரணி- பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், வக்கீல் நல்லத்துரை, ம.தி.மு.க. நிர்வாகி ஆடுதுறை முருகன், திராவிடர் கழக நிர்வாகி உத்திராபதி, ஓய்வு பெற்ற நீதிபதி சுப்பையன், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கோஷங்கள்
முன்னதாக ஒரத்தநாடு புதூர் அய்யனார் கோவில் அருகிலிருந்து பேரணி புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக பஸ்நிலையம் வந்தடைந்தது. இதில் கலந்துகொண்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தகூடாது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் பொருளாளர் சதாசிவம் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story