தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 75 பேர் மீது வழக்கு


தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 75 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 April 2018 2:45 AM IST (Updated: 15 April 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 75 பேர் மீது சங்கராபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்துள்ளார்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள ஆலத்து£ர் காலனியில் சாலையோரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடிகம்பம் கட்டைகள் கட்டி இருந்தனர். இது பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார், சங்கராபுரம் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உரிய அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி அவற்றை அப்புறப்படுத்தினர்.

இதை கண்டித்து சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அன்பழகன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் உள்பட 75 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.

Next Story