பராமரிப்பு பணி காரணமாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


பராமரிப்பு பணி காரணமாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 15 April 2018 3:15 AM IST (Updated: 15 April 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக மத்திய ரெயில்வே வழித்தடத் தில் இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய் யப்பட்டுள்ளது. மேற்கு ரெயில்வே வழித் தடத்தில் ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும்.

மும்பை,

பராமரிப்பு பணி காரணமாக மத்திய ரெயில்வே வழித்தடத் தில் இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய் யப்பட்டுள்ளது. மேற்கு ரெயில்வே வழித் தடத்தில் ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும்.

பராமரிப்பு பணி

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள கல்யாண் - தானே ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்லோ வழித்தடத்தில் காலை 11.20 மணி முதல் மாலை 4.20 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக காலை 10.48 மணி முதல் மாலை 4.14 மணி வரை சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் ஸ்லோ ரெயில்கள் கல்யாண் - முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படும். இதன் காரண மாக சி.எஸ்.எம்.டி. மார்க்கத்தில் தாக்குர்லி, கோபர், மும்ரா, கல்வா ஆகிய இடங்களில் ரெயில் சேவை இருக்காது.

துறைமுக வழித்தடம்

துறைமுக வழித்தடத் தில் குர்லா - வாஷி இடையே இருமார்க் கத்திலும் காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர், பன்வெல் செல்லும் ரெயில்கள் காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.39 மணி வரையும், மேற்கண்ட இடங்களில் இருந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் ரெயில்கள் காலை 10.21 மணி முதல் பிற்பகல் 3.41 மணி வரையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இருப்பினும் பராமரிப்பு பணியின் போது சி.எஸ்.எம்.டி. - குர்லா இடையேயும், வாஷி - பன்வெல் இடையேயும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணி ஏதும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த வழித்தடத்தில் இன்று வழக்கம் போல் மின்சார ரெயில்கள் இயங்கும். இந்த தகவல்கள் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Next Story