தாய் திட்டியதால் சென்னை சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
புனேயில், தாய் திட்டியதால் மனமுடைந்த சென்னையை சேர்ந்த சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
புனே,
புனேயில், தாய் திட்டியதால் மனமுடைந்த சென்னையை சேர்ந்த சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
சிறுமி
புனே காலேவாடி நடேநகரில் வசித்து வருபவர் துரைசாமி முதலியார். டிரைவர். இவரது மனைவி பிம்பிரி சிஞ்ச்வாட் மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு சேஜல் (வயது14) என்ற மகள் இருந்தாள். சிறுமி பிம்பிரியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
சிறுமிக்கு தேர்வு முடிந்த நிலையில், விடுமுறைக்கு துரைசாமி தனது மனைவி மற்றும் மகளுடன் சொந்த ஊரான சென்னைக்கு செல்ல முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் துரைசாமியின் மனைவி, மகள் சேஜலிடம் சில வீட்டு வேலைகளை செய்யும்படி கூறியிருக்கிறார். ஆனால் அவள் அந்த வேலைகளை செய்யவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக அவர் மகளை கோபத்தில் சத்தம் போட்டார்.
தூக்கில் தொங்கினாள்
மாலையில் துரைசாமியும், அவரது மனைவியும் மார்க்கெட்டுக்கு சென்றிருந்தனர். அப்போது அவர்கள் மகள் சேஜலை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவள் போனை எடுக்கவில்லை. பின்னர் பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கு போன் செய்து, சேஜலை பேச சொல்லும்படி கூறினர்.
அதை சொல்வதற்காக அவர் துரைசாமியின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் சிறுமி சேஜல் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது, சிறுமி சேஜல் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸ் விசாரணை
இதனால் பதற்றமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வாகட் போலீசார் அவளது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், தாய் திட்டியதால் அவள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story